/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வி.ஏ.ஓ.,க்கள் சங்க தென் மண்டல மாநாடுவி.ஏ.ஓ.,க்கள் சங்க தென் மண்டல மாநாடு
வி.ஏ.ஓ.,க்கள் சங்க தென் மண்டல மாநாடு
வி.ஏ.ஓ.,க்கள் சங்க தென் மண்டல மாநாடு
வி.ஏ.ஓ.,க்கள் சங்க தென் மண்டல மாநாடு
ADDED : ஜூன் 01, 2010 01:23 AM
சிவகாசி: சிவகாசியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தென்மண்டல மாநாடு நடந்தது.
அமைச்சர்கள் மைதீன் கான், சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பூங்கோதை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாநில தலைவர் மீனாட்சி சுந்தரம் சங்க கொடியேற்றினார். பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் மாநாட்டை விளக்கி பேசினார். தலைமை வகித்த சபாநாயகர் ஆவுடையப்பன், "உங்கள் கிராம நிர்வாகி' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:
வருமான சான்று, முதியோர் உதவி தொகை பெறுவதற்கு பொதுமக்கள் வந்தால், சாதாரண குடிசை வீடு இருந்தால் கூட மனுவை தள்ளுபடி செய்து விடுகிறீர்கள். வி.ஏ.ஓ.,க்கள் மனிதாபிமானத்தோடு செயல்பட வேண்டும், என்றார். அமைச்சர் பூங்கோதை பேசியதாவது: அரசு நிர்வாகத்தில் ஒளிவு மறைவு இன்றி செயல்படும் மின் ஆளுமை திட்டத்தை கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலூர், திருவாரூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் விரைவில் துவக்க உள்ளோம். இத்திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு வி.ஏ.ஓ., விற்கும் கம்ப்யூட்டர் வழங்க வேண்டும், என்றார். முன்னாள் அமைச்சர் தங்கவேலு, மாநில செயலாளர் சண்முகம், வெங்கடேசன், சிவகாசி ஒன்றிய தலைவர் வனராஜா, ஆணையூர் ஊராட்சி தலைவி ருக்மணி உள்பட பலர் வாழ்த்தி பேசினர். ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்த வேண்டும் என்பது உட்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.